நாடாளுமன்ற உறுப்பினர் நிப்புன ரணவக்க தெனியா பிரதேசத்தில் உள்ள வீட்டில் யானை குட்டி ஒன்றை வளர்த்து வருவதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகனான நிப்புண ரணவக்கவின் வீட்டை நேற்று சுற்றி வளைத்த பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பாரிய சத்தங்களுடன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வீட்டில் இரகசியமான முறையில் வளர்க்கப்பட்ட யானைக்குட்டி வெளியில் வந்து பொதுமக்களை பார்வையிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இசை எழுப்பிய போது அந்த இசைக்கேற்ப யானை நடனமாடி மக்கள் வியப்பில் ஆழ்த்தியது. இதன்போது யானைக்குட்டி தமது ஆதரவு தெரிவிப்பதாக கூட்டத்தில் உள்ள மக்கள் கூச்சலிட்டனர். எனினும் நிப்புன ரணவக்க வீட்டை சுற்றிவளைக்க முடியாமல் அங்கிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் வீட்டில் யானை வளர்க்க சட்ட ரீதியாக அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.