மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவணி இன்றைய தினம் தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில், ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற வாசகத்துடன் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாளான நாளை, நாலாந்தாவில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.