பெற்றோலிய சிறப்பு ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்த மசோதா பொருளாதாரத்தின் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கிறது.
அதேசமயம் , கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதியன்று அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.