முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினருக்கு covid – 19 தொற்று ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அலுவலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அறியத்தந்துள்ளார்.
மேலும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்காலத்தில் தங்களுக்கு அறியத் தரப்படும்.
எனவே தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகிறேன் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்