இரத்தினபுரியில் உள்ள பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சடலம் பெல்மடுல்ல புலத்வெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்றைய தினம் (31-03-2023) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
40 வயதுடைய சட்டத்தரணி துஷ்மந்தி அபேரத்னவின் சடலமே அவரது வீட்டின் படுக்கையறையிலுள்ள படுக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (30-03-2023) முதல் சட்டத்தரணியின் கணவர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பெல்மடுல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த சட்டத்தரணி துஷ்மந்தி அபேரத்ன நேற்றிரவு தனது கையடக்கத் தொலைபேசியில் குடும்பஸ்தர் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.