பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், உயிரிழந்த 25 வயதுடைய நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இதேவேளை, முதல் திருமணம் செய்த மனைவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து, இரண்டாவது மனைவியின் தந்தை, குறித்த நபரையும் மகளையும் வேனில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த கொடூர தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டாவது மனைவியின் தந்தை, தாய் மற்றும் அவரது இளைய சகோதரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.