மன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை மருந்துபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைவிடப்பட்ட மருந்துபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான நடவடிக்கை
நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் மருந்துபொருட்கள் கொண்டு வர முயற்சித்த நிலையில். கடற்படையினரின் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்கப்பட்டுள்ள மருந்துபொருட்கள் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியானது எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.