ரஷ்ய படைகளுக்கு எதிரான போரில் காயமடைந்த வீரர்களை காண மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைநகர் கீவில் உள்ள ராணுவ வீரர்களை ஜெலென்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபது அவர்களுடன் உரையாடிய நேரம் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
அத்துடன் போரில் கொல்லப்பட்ட இரணுவ வீரர்களை உக்ரைனின் மாவீரர்கள் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அறிவித்து கௌரவித்தார்.
அதேசமயம் , படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனியர் லெப்டினன்ட் Hutsul Volodymyr Olesksandrovych-க்கு, ரஷ்ய இராணுவ உபகரணங்களின் 25 யூனிட்டுகளை அழித்ததற்காகவும், சுமார் 300 படையெடுப்பு வீரர்களைக் கொன்றதற்காகவும் பட்டமும் பதக்கமும் கொடுத்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கௌரவித்தார்.
மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உக்ரைனிய பாதுகாப்புத்துறையினரின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதில் நண்பர்களே விரைவில் குணமடையுங்கள் நம்முடைய பொதுவான வெற்றி மட்டுமே உங்களுக்கான சிறந்த பரிசாக இருக்கும் எனவும் வீரர்களிடம் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் மருத்துவமனைக்கு வரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பலரும் பகிர்ந்துள்ளதுடன், உக்ரைன் அதிபரின் செயலை கண்டு இது சிறந்த தலைமை என ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.