தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (9) வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இஞ்சி விலை கிலோ மூவாயிரம் ரூபாயாக பதிவாகியுள்ளது.
மரக்கறிகளின் விலை
அதன்படி, ஒரு கிலோ கரட் 120/150 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பீன்ஸ் 150/180 ரூபாவாகவும்,
ஒரு கிலோ லீக்ஸ் 150/180 ரூபாவாகவும்,
ஒரு கிலோ தக்காளி 30/40 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பச்சை மிளகாய் 70/80 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கறிமிளகாய் 150/180 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 110 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 40/50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ வெண்டைக்காய் 90/120 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பீர்க்கங்காய் 120/150 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பாகற்காய் 130/150 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பூசணிக்காய் 25/30 ரூபாவாகவும்,
ஒரு கிலோ கத்தரிக்காய் 90/150 ரூபாவாகவும்,
ஒரு கிலோ முட்டைக்கோஸ் 90/110 ரூபாவாகவும்,
ஒரு கிலோ தேசிக்காய் 600 ரூபாவாகவும் உள்ளது.
அதேவேளை , ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.