சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் 90 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஆகியோர் இணைந்து இன்று இக்கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

