மன்னர் நீதிவான் நீதிமன்றில் சான்று பொருளாக காணப்பட்ட 570 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு. பொது சுகாதார பரிசோதகரின் பரிந்துரையில் பள்ளிமுனை கடற்கரையில் இன்று பிற்பகல் கஞ்சா போதைப்பொருள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.
மன்னார் நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் அவரது அறிவித்தலில் பதிவாளர் திருமதி தர்சிகா தர்சனின் ஏற்பாட்டில் இவ்வாறு போதைப்பொருள் சான்றுப்பொருள்கள் அழிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையில் உள்ள தேர்தெடுக்கப்பட்ட 5 வழக்குகளின் கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.