மன்னார், முருங்கன் பகுதியில் 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, முருங்கன் நிலையம் அருகே உள்ள பொலிஸ் காவல் தடுப்பில் லொரி ஒன்றை சோதனைக்காக மறித்த போது, கட்டளைகளை மீறி சென்ற லொரியை துரத்திச் சென்று போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியாவில் வசிக்கும் 30 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (02) ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.