மன்னாரில் 248 படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்தது.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 291 மன்னார் கடற்படையை சேர்ந்தவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் 18 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், இவர்கள் பயிற்சி நிலை கடற்படையினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.