வீட்டின் படுக்கை அறையில் தீ பரவலில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உடவலவை – கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே நேற்றைதினம் (17-04-2024) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அதே வீட்டில் வசிக்கும் 48 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டிற்கு அருகாமையில் கடை ஒன்றை நடாத்தி வந்த அவர், நேற்று அதிகாலை தனது மனைவியுடன் தகராறு செய்து வீட்டிற்குள் வந்து தீ வைத்து கொண்டதாக மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய நீதவான், தள விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடவலவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.