இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் குடும்ப தலைவரால் வீட்டு அறைக்கு தீ மூட்டப்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. தனது மனைவி கள்ளக்காதலனுடன் அறையில் இருப்பதை கண்ட கணவன் படுக்கை அறைக்கு தீ வைத்த நிலையில் மனைவியும் கள்ளக்காதலனும் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதான கணவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதவான் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்.