இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் கருமபீடம் புதன்கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி முதல் புதன்கிழமைகளில் (பொது விடுமுறை தினங்கள் தவிர்த்து) மறு அறிவித்தல் வரை சேதமடைந்த நாணயத்தாள் கருபீடம் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பொதுமக்கள் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.