மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெரண 360 நிகழ்ச்சியில் கந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது. 2 பில்லியன் கூட இல்லை என்று நினைக்கிறேன். பங்களாதேஷிலிருந்து கொஞ்சம் பணம் வாங்குகின்றனர். இந்தியாவிடம் பெற்றுக் கொண்டு அங்கும் கேட்கிறார்கள். இது சரிபட்டு வராது. வங்கி நன்றாக இருந்தால், ஏன் முன்னாள் ஆளுநரை வைத்திருக்கவில்லை …. ” என்றார்.