மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கன மழை காரணமாக விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் வான் பாய்கிறது.
இன்று மதியம் முதல் வான் பாய்கிறது இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கன மழை காரணமாக ஹட்டன் நகரில் குடியிருப்பு மீது பாரிய மண் திட்டு சரிந்து விழுந்தது உள்ளது.
அப் பகுதியில் உள்ள பாதுகாப்பு கட்டிடம் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு வீசிய காற்று காரணமாக நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்க பட்டு உள்ளது
ஆங்காங்கே மரங்கள் முறிந்து வீழ்ந்தால் போக்குவரத்து தடை பட்ட போதும் அவ்வப்போது அவை அகற்ற பட்டு போக்குவரத்து சீர் செய்ய பட்டு உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.