கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அத்தோடு மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அளவுக்கதிகமாக நேற்று (30) இரவு மது அருந்தி குறித்த நபர் மயக்கமடைந்துள்ளார்.
சம்பவம்
அதன்போது அவருடன் மது அருந்திய சக நண்பர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் மயங்கிக்கிடந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிறப்புறுப்பு வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கீழே விழுந்த நபரை அவரது ஏனைய நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.