மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த ஆய்வு உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கிறதாம்.
அதேவேளையில், வாரம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் சிவப்பு வைன் அருந்துவதால் கொரோனா அபாயம் 17 சதவீதம் அளவுக்கு குறைகிறதாம்.
இந்த விஷயத்தில் வெள்ளை வைனும், சாம்பைனும் கூட நன்மை அளிக்கின்றன என்றாலும், அவற்றின் பலன் சிவப்பு வைனுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வு முடிவை மதுக்கோப்பையை கையில் ஏந்தி கொண்டாட வேண்டியதுதான்’ என்று மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைய வேண்டாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
ஏனெனில் பீர் அருந்துவது, கொரோனா தொற்று அபாயத்தை 7 மடங்கு (728 சதவீதம்) அளவுக்கு அதிகரிக்கிறதாம்.
மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வை, அப்படியே நடைமுறையில் பொருத்திப் பார்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேசமயம் மதுபானங்களால் தீமையே அதிகம் என மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிட்டுள்ளது.