2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய,
வரவு செலவுத் திட்டம் 2022- வரி விதித்தல்
I. வரி வருமான முன்மொழிவுகள்
1. ஒருமுறை மாத்திரம் வருமானம் மீது அறவிடப்படும் மிகை வரி
2020/2021 மதிப்பீட்டு ஆண்டுக்காக ரூபா 2,000 மில்லியனுக்கு மேற்பட்ட வரி அறவிடக்கூடிய வருமானமொன்றை சம்பாதிக்கும் தனி நபர்கள் மீது அல்லது கம்பனிகள் மீது 2 சதவீத மிகைக் கட்டண வரியொன்றை விதித்தல்.
2. சமூகப்பாதுகாப்பு பங்களிப்பு
3 சதவீத விலையில் வருடமொன்றுக்கு ரூபா 120 மில்லியனுக்கு மேல் பொறுப்புள்ள விற்பனைப் புரள்வின் மீது சமூகப்பாதுகாப்பு பங்களிப்பை அறவிடுதல். இந்தப் பங்களிப்பு 2022 ஏப்ரல் 1ஆந் திகதியிலிருந்து செயல்வலுப்பெறும் விதமாக அறவிடப்படுகின்றது.
3. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்சட்டத்துக்கான திருத்தங்கள்.
3.1 நிதி நிறுவனங்களினால் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் வரை நிதிச்சேவைகளை வழங்குதல் தொடர்பான பெறுமதி சேர் வரிக் கட்டணத்தை அதிகரித்தல். இந்த அறவீடு 2022 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து 2022 டிசம்பர் 31 ஆந் திகதி வரை ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட வேண்டும்.
3.2 2022 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து செயல் வலுப் பெறும் விதமாக சுகாதார விடயத்துக்குப் பொறுப்பாக குறித்தொதுக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சினது செயலாளரின் பரிந்துரையின் அடிப்படையில் நிதி அமைச்சரினால் அங்கீகாரமளிக்கப்பட்ட ஏதேனும் தொற்றுநோய் அல்லது பொதுச் சுகாதார அவசர நிலையை எடுத்துக் கூறுவதற்கு சுகாதார சேவைகளின் ஏற்பாட்டுக்காக அரசாங்க வைத்தியசாலை ஒன்றுக்கு அல்லது சுகாதார அமைச்சுக்கு நன்கொடை அளிக்கப்படும் மருத்துவ உபகரணம், இயந்திர சாதனம், கருவிகள், துணைப்பாகங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள், வைத்தியசாலைத் தளபாடம் மருந்துகள் மற்றும் இரசாயணப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செயதல் அல்லது வழங்கல் தொடர்பில் பெறுமதிசேர் வரி விலக்குகளை அனுமதிப்பதற்கு 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச்சட்டத்தின் 1 ஆவது அட்டவணையின் பகுதி (1) இன் பந்தி (அ) இல் நியதியை (xxxi) திருத்துதல்.
4. சிகரட் மீதான மதுவரி (விசேட ஏற்பாடுகள்)
சிகரட் மீதான மதுவரித் திருத்தம்
சிகரட் மீது அறவிடப்படுகின்ற வரியை உடனடியாக செயல்வலுப்பெறும் விதமாக அதிகரிப்பதற்கும். அதற்கு அமைவாக ஒரு சிகரட்டின் விலையை ஐந்து ரூபாவினால் (5) அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
5. மதுவரிக் கட்டளைச் சட்டத்தின்கீழ் மதுபானம் மீதான மதுவரி
மதுபானம் மீதான மதுவரித் திருத்தம்
உடனடியாக செயல்வலுப் பெறும் விதமாக மது வரியை அதிகரிப்பதற்கும், இந்த வரியை அதிகரிப்பதன் மூலம் ரூபா 25 பில்லியன் மேலதிக வருமானமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.