மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை – ரபானவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுபான விருந்தின்போது இரு கோஷ்டிக்கு இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.
அது அடிதடியில் முடிந்த நிலையில் 19 வயதான இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவத்தில் மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.