கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாகச் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டதில் மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 48 கால் போத்தல் சட்டவிரோத மதுபானம் மற்றும் 41 ரின் பியர்களுடன் தருமபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்