அரசாங்கம் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இன்று காலை வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர்.
மண்ணெண்ணெய் கோரி கொழும்பு ஒறுகொடவத்தை பிரதேச மக்கள் கொழும்பு பேஸ்லைன் வீதியை ஒறுகொடவத்தை சந்தியிலிருந்து மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வீதியை விட்டு விலகி, போக்கு வரத்துக்கு அனுமதி அளித்துள்ளனர்.

