சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் உற்பத்தி செய்துள்ளது.
குறித்த தொகை மண்ணெண்ணெய் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் உற்பத்தி தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.