மட்டக்களப்பில் உள்ள ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு
பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த எரிபொருள் விநியோகமானது பிராந்திய ஊடகவியலாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கே.செல்வராசாவின் மேற்பார்வையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க முன்னிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.