மட்டக்களப்பில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இன்றுகாலை சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீதிக்கு அருகிலேயே இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு இன்று காலை 6 மணியளவில் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
எனினும் குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்