மசாஜ் நிலையத்திற்கு சென்ற வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மசாஜ் நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் அஹங்கம கபலான பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் சேவையாற்றி வருபவர் என கூறப்படுகின்றது.
இங்கிலாந்து பெண் ஒருவருக்கு மசாஜ் செய்துக்கொண்டிருந்த போது சந்தேக நபர் பெண்ணிடம் அத்தீறியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.