கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கடந்த சில தினங்களாக தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டவகளில் இவரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் இலங்கை மக்களுக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முக்கிய பங்காற்றிய பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் இன்று மங்கள அமரவீர உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.