மக்கள் போராட்டம் மீண்டும் நிகழாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்டெடுக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது வீழ்ச்சியடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பு ITC ரத்னதீப விருந்தினர் மாளிகையை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.