பெட்ரோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் 35,000 முதல் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் உள்ளடங்குவதாக அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதோடு, கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் மிகுதி கட்டணம் செலுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.