கொழும்பின் அண்மித்த பிரதேசம் ஒன்றில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்த ஒருவரெனவும் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் வேறொரு தரகரால் அமர்த்தப்பட்டுள்ளார்.
சிறுநீரகங்களை பெற தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கஜிமாவத்தை, தொட்டலங்கை மோதரை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேரை தரகர் இணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் திவிர விசாரணைகள் ஆரம்ப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது