எதிர்வரும் 26, 28 ஆம் திகதிகளில் 7,200 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த எரிவாயு கப்பல் நாட்டிற்கு வந்தடைந்த மறுநாள் தொடக்கம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதால், நாளாந்தம் 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.