மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம்†வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 2003ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வும் வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.