இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு படம் என்றால் அது பாகுபலி தான்.பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இரண்டு பாகங்களும் ஓடியது. பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் 2015-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட பாகுபலி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தின் போர் காட்சிகள் தரமான கிராஃபிக்ஸ்கள் உடன் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாகுபலி படத்தின் ஆரம்ப காட்சியில் ரம்யா கிருஷ்ணன் தான் இறக்கும் போதும் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றுவார். அந்த குழந்தை தான் மகேந்திர பாகுபலி. ரம்யா கிருஷ்ணன் நீரில் மூழ்கியபடியும் அவரது ஒரு கையால் குழந்தையை தூக்கிபிடித்தப்படி இருக்கும் போஸ்டர் அப்போது மிகவும் பிரபலமானது. தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த குழந்தையின் பெயர் தன்வி. தன்வி தற்போது பள்ளிக்குச் செல்கிறாள். அந்த சிறுமி தற்போது யு.கே.ஜி படிக்கிறார்.
బాహుబలి సినిమాలో కట్టప్ప ఎత్తుకున్న ఈ పాప(మహేంద్ర బాహుబలి) ఇప్పుడు యూకేజీ చదువుతుంది. పేరు తన్వి. @ssrajamouli pic.twitter.com/Aj31XvG6EB
— DONTHU RAMESH (@DonthuRamesh) January 27, 2021