ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 3 மகிழுந்துகளை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 3 பேர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய அவர் கைதானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அச் சந்தேகநபர் அலகுக்கலை நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலர் இந்த மோசடியில் சிக்குண்டுள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.