எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என சிறிலங்கா மகாஜன கட்சியின் தலைவரும், மகிந்தவின் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய முக்கிய வேட்பாளர்களுக்கு பல அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தமது ஆதரவை அறிவித்துள்ளன.
அந்த வகையில் ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்க அரசியல் கட்சிகள் முன்வரவில்லை.
எனினும், முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அவருக்கு கணிசமான ஆதரவை வழங்கியுள்ளனர்.