கொஸ்கொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் அவரது மகன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து தந்தை மகனின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த இளைஞன் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொட எஸ். ஓ. எஸ். கிராமத்தில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த கொலை தொடர்பாக அவரது 62 வயதுடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.