ஹொரணை – கந்தான பகுதியில், மகனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஹொரண நீலக்க என்ற நபர், மாமியாரின் பொறுப்பில் இருந்த தனது மகனை கடத்திச் சென்றுள்ளார்.
அது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சந்தேக நபர் தனது மனைவியின் கை-கால்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு குறித்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, தனது மகனை கடத்திச் சென்ற நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.