கஹட்டகஸ்திகிலிய பகுதியில் கழுத்தை அறுத்து நபரொருவரை கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சந்தேகநபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய குடாபடிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இறந்தவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக தந்தையால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லேவ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.