பெருந்தொகையான நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த திருடப்பட்டமை தொடர்பில் 04 களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள் நால்வரே சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார்.
மொத்த கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.