போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மூன்று பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் கண்டியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தலாத்துஓயா மாரஸ்ஸன பலநோக்குக் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஊழியரின் மூன்று பற்கள் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்