போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை பிரதேசத்தில் வலான மத்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை அதிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 73 வயதுடைய கந்தானை , புகையிரதவீதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவரால் வெவ்வேறு மன உளைச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு போதை மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர் குறித்து மேலதின விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.