கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நேற்று (24) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்ட OIC தற்போது மாத்தறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன