திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதி ஒன்றின் அருகில் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வரும் 25 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அவரிடமிருந்து சுமார் 450 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.