நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், சில மாணவர்களை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (2023.11.23) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைப்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து பாடசாலை அதிபர் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு வசதியாக அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.