இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பலரை தூக்கிட்டு தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வது முதல் குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது வரை இந்த நெருக்கடியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடும்பங்களையும் பாதித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்களும் தங்களின் செலவுகளைச் சமாளிக்க பொருத்தமான வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டை விட்டு வெளியேற பலர் ஆவலுடன் காத்திருக்கும்போது தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நாட்டிலேயே தங்க விரும்புபவர்களும் உள்ளனர்.
இந்தநிலையில் பணத்தை உழைப்பதற்காக சில குடும்பங்கள் பயன்படுத்தும் சமீபத்திய உயிர்வாழும் முறை பாலியல் தொழிலாகவும் மாற்றம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகமான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் அதேவேளையில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலையும் ஆங்கில ஊடகமொன்று ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து கடந்த சில மாதங்களுக்குள் அதிகமான ஆண்கள் ‘ஆண் பாதுகாப்பு’ சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து பாலியல் நோக்கங்களுக்காக, ஆண்களை வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்த இணையத்தளங்கள் செயல்படுவதாகவும், ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.