பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச நேற்று நாடு திரும்பிய நிலையில் அவருக்கு விஐபி பகுதியில் வரவேற்பளிக்கப்படுகின்றது.
அமைச்சர்கள் படையெடுத்து சென்றனர். நாட்டை படுகுழியில் தள்லிய பொருளாதாரக் கொலையாளிக்கு எப்படி பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியும்? அத்துடன் மற்றுமொரு பொருளாதாரக் கொலையாளி கப்ரால், பொருளாதாரக் கொலையாளி பற்றி புத்தகம் எழுதுவது நகைப்புக்குரிய விடயமாகும் எனவும் அவர் கூறினார்.