இலங்கையில் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது, இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக செயலி ஒன்றையும் கிவ்.ஆர் கோட் (QR Code) ஒன்றையும் உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர், இதற்கான பணிகள் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றதாகவும் கூறினார்.
இந்த நிலையில் குறித்த செயன்முறைக்கு இரண்டு வார காலம் எடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குப் பிரவேசிப்பது தொடர்பில், சட்ட கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயற்பட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.