பொதுவாக இந்த சிலை வீட்டில் இருந்தால் வறுமை என்பது ஏற்படாது. ஏழேழு பிறவிக்கும் துன்பம் இல்லாத வாழ்வு அமையும்.
அடுத்தடுத்த சந்ததியினருக்கும் பசி, பட்டினி என்கிற நிலை வராது என்பது ஐதீகம். அப்படிப்பட்ட இந்த சிலை உங்களிடம் கண்டிப்பாக இருப்பது அதிர்ஷ்டமான ஒரு விஷயம் தான்.
அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்
பொதுவாக அன்னத்திற்கு தாயாக இருப்பவள் அன்னபூரணி ஆவாள். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை ஆகிய மூன்றும் அதி முக்கியமானதாக இருந்து வருகிறது.
ஒருவனுக்கு இந்த தேவை பூர்த்தி ஆனாலே அவன் பணக்காரன் தான். அது கூட இல்லாமல் இருப்பவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.
அந்த நிலை நமக்கும் வராமல் இருக்க வீட்டில் நிறுவ வேண்டிய ஒரு சிலை அன்னபூரணி மிகவும் சிறிய அளவில் வைத்திருந்தால் கூட போதும் அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
எவ்வாறு வழிபட வேண்டும்
பொதுவாக அன்னபூரணி காசியில் விசேஷமாக கொண்டாடப்படுகிறார். எனவே காசியில் இருந்து வாங்கி வரப்படும் அன்னபூரணி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முடிந்தால் காசிக்கு செல்பவர்கள் அன்னபூரணியின் சிலையை வாங்கி வந்து வைத்து மற்றவர்களுக்கும் பரிசளிப்பது சிறந்தது.
இந்த அன்னபூரணி சிலை வீட்டில் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தினமும் அதற்கு அரிசி முதலான தானியங்களை போட்டு வைத்திருக்க வேண்டும்.
எவ்வாறு வைக்க கூடாது
வெறும் அன்னபூரணியை வீட்டில் வைக்கக் கூடாது, இது வறுமையை உண்டாக்கும். அன்னபூரணி சிலையை ஒரு சிறிய அளவிலான பித்தளை அல்லது செம்பினால் ஆன தட்டின் மீது வையுங்கள்.அன்னபூரணியை தட்டில் வைக்கும் முன்பு தட்டு நிறைய தானியங்களை நிரப்புங்கள்.
வட இந்திய மாநிலங்களில் கோதுமையை நிரப்புவார்கள். நம்முடைய தமிழ் நாட்டில் அரிசியை நிரப்புவார்கள். அதன் மீது அன்னபூரணியை கம்பீரமாக அமர வைத்து அன்னபூரணியின் கையில் இருக்கும் கரண்டியிலும் சில தானியங்களை போடுவார்கள்.
எதற்கு வழிபட வேண்டும்
பின்னர் அரிசியை சுற்றிலும் நாணயங்களை போடுங்கள்.தனம், தானியம் இரண்டும் பெருக அன்னபூரணியை இவ்வாறு வழிபட வேண்டும்.
மறுநாள் காலையில் அந்த தானியங்களை பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானது.
தானியங்களை போட்டு வைக்கும் முறை
மீண்டும் காலையில் புதிதாக தானியங்களை போட்டு வைக்க வேண்டும் தினமும் தானியங்களை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை 10, 15 தானியங்களை போட்டு வைத்து அதை பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் உணவாக கொடுத்தால் போதும்.
தானம்
அன்னபூரணியின் அரிசியை சுற்றிலும் இருக்கக்கூடிய நாணயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயங்களை உண்மையிலேயே பிச்சை கேட்பவர்கள் அதாவது கை, கால் இழந்து அவர்களால் செயல்பட முடியாத நிலையில் இருப்பவர்கள் கேட்பவர்களுக்கு தானம் செய்யலாம்.
வயது முதிர்ந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் வேறு வேலை செய்ய முடியாமல் பிச்சை கேட்பவர்களுக்கு தாராளமாக இந்த நாணயங்களை தானம் செய்யலாம்.
அவர்களுக்கு ஒரு வேலை உணவு பொட்டலம் வாங்கிக் கொடுத்தால் ஏழேழு பிறவிக்கும் வந்த துன்பம் எல்லாம் நீங்கும்.
எப்பேர்பட்ட தீய தோஷங்களும் நீங்கி, உங்களுக்கு வறுமை இல்லாத செழிப்பான, செல்வ வளமான வாழ்க்கை அமையும். தடைபட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும், சுபகாரியங்கள் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது எனவே அன்னபூரணி சிலை இருந்தால் இப்படி அவர்களை வழிபட்டு பயனடையுங்கள்.